தஞ்சையில் 2004 மார்ச் 21 அன்று முஸ்லிம்களின் மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணி திலகர் திடலை அடைந்து மாநாடு நடந்தது. மாநாடு நடந்த திலகர் திடலின் மொத்த பரப்பளவு 97,450 சதுர அடியாகும்.2006 ஜனவரி 29 அன்று கும்பகோணத்தில் முஸ்லிம்களின் உரிமை மீட்புப் பேரணியும், மாநாடும் நடைபெற்றது. இப்பேரணி, கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் முடிந்தது. நான்கு வீதிகள் சந்திக்கும் காந்தியடிகள் சாலையில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டது. மாநாட்டின் இடதுபுறம் (கடலங்குடி தெரு) மட்டும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டாலும், பெண்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததால், ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட மேடையின் வலதுபுற சாலையும், மேடையின் முன்புறம் அமைந்த வீதியும் பெண்களுக்கே ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. இதுதவிர உச்சிப் பிள்ளையார் கோவில் வீதியைத் தாண்டி தஞ்சை மெயின் ரோடுக்கு அப்பால் சாரங்கபாணி மேலவீதியிலும், தேரடி வரை பெண்கள் நிரம்பி வழிந்தனர்.

மேலும், நாகேஸ்வரன் தெற்கு வீதி, நாகேஸ்வரன் மேற்கு வீதி மற்றம் பெரிய பள்ளிவாசல் தெருவிலும் பெண்களே ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்த சிறிய வீதிகளைக் கணக்கில் கொள்ளாமல் பெண்கள் நிரம்பி வழிந்த மேடையின் வலது, இடது மற்றும் எதிர்புறம் ஆகிய மூன்று பகுதிகளின் பரப்பளவு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 725 சதுர அடியாகும்.

அதாவது தஞ்சை மாநாட்டின் போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட திலகர் திடலின் பரப்பளவை விட, கும்பகோணத்தில் பெண்கள் மட்டும் அமர்ந்திருந்த மூன்று பகுதிகளின் பரப்பளவு மட்டும் நாற்பதாயிரம் சதுரடி அதிகமாகும். மேலும், உச்சிப் பிள்ளையார் கோவில் வீதியைத் தாண்டி தஞ்சை மெயின் ரோடுக்கு அப்பால் சாரங்கபாணி மேலவீதி தேரடி வரை நாகேஸ்வரன் தெற்கு வீதி, நாகேஸ்வரன் மேற்கு வீதி ஆகியவற்றையும் சேர்த்தால் திலகர் திடலைவிட இரு மடங்கு பரப்பளவில் பெண்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஆண்களுக்குரிய இடத்தையும் கணக்கில் கொண்டால் திலகர் திடலை விட சுமார் ஆறு மடங்கு இடங்களில் மக்கள் குழுமியிருந்தனர். சுருங்கச் சொன்னால் தஞ்சையில் திரண்ட மக்கள் திரளை விட ஐந்து முதல் ஆறு மடங்கு மக்கள் குடந்தையில் திரண்டனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.. தஞ்சையில் திரண்ட அந்த மக்களில் பெரும்பாலோரும் தவ்ஹீத் ஜமாஅத்தும் இணைந்திருந்ததால் வந்தவர்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அறிவுடையோர் இதிலிருந்தே வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம்.

கண்ணுக்கு எட்டா தூரத்திலும் நிற்கும் பேரணிக்கு வந்த வாகனங்கள்...

அசூர் பைபாஸிலிருந்து சென்னை மார்க்கத்தில் நின்ற வாகனங்கள்

அசூர் பைபாஸிலிருந்து தஞ்சை மார்க்கத்தில் நின்ற வாகனங்கள்

கும்பகோணம் மார்க்கத்தில் நின்ற வாகனங்கள்

அணி அணியாய் மக்கள்...

1. பேரணி துவக்கத்தில் மூன்று பேர் கொண்ட வரிசையாக சென்ற போது...

2. நேரம் செல்லச் செல்ல ஐந்து ஆறு பேர் கொண்ட வரிசையாக ஆன போது...

3. பின்னர், சாலையையே அடைத்துக் கொண்டு சென்ற போது...

எல்லாப் புகழும் வல்ல நாயனுக்கே!

0 comments: