இஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா? இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி? என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.

1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.

2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.

3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.

4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.

5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.

6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.

7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.

8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.

9. மொழி, இனம், பாரம்பரியம் மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.

10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.

11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.

12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.

13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.

இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. 
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36).என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்

குறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.

Muzzammil Cabs Tour & Travels

We offers our services in a wide range starting from Package Tours, HoneyMoon Packages, City Tour, Special SabariMala Trip and Vacation Packages.

Muzzammil Cabs has its commitment over 24 x 7 Service





We arrage for Pickup you in Chennai Airport & Tirchy Airport


Make your ride safe and happy with us.


Contact Us:


A.S. Mohamed Ashraf Ali

Mobile : +919600575707, +919600575700

Melpattambakkam, Cuddalore District

Tamil Nadu, India



For UAE Contact: +971505861236





அண்மையில் ஜெர்மனியிலும் பிரான்சிலும் ஹிஜாப் எனும் இஸ்லாமிய உடை அணிதலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் முஸ்லிம் பெண்களின் உடைநெறி சம்பந்தப்பட்ட கருத்துக்களை மீண்டும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. இது சம்பந்தமாக பலவித விவாதங்களும் நடைபெருகின்றன. ஹிஜாப் என்பது இஸ்லாமிய 

மார்க்க கடமையா? அல்லது சுயவிருப்பின் பிரகாரம் அணியும் உடையா? இஸ்லாமிய உடைநெறி ஒரு குறிப்பான வடிவமைப்பை கருதுகிறதா? அல்லது எது கண்ணியமான உடையென கருதப்படுகிறதோ அதனை தன் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து அணியலாமா? எனப் பல 

கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.


ஹிஜாப் அல்லது ஹிஜாப் மற்றும் ஹிமார்(முக்காடு) என்பது இஸ்லாமிய கடமை அல்ல, மாறாக சுயவிருப்பின் பேரில் அணியும் உடையென முஸ்லிம்களில் சிலர் வாதிக்கின்றனர். பெண் கண்ணியத்தை பேணும் வகையில் இருக்குமேயானால் எவ்வித உடையையும் அணியலாம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உதாரணமாக இஸ்லாம் குறித்த பல புத்தகங்களின் ஆசிரியரும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் (அல்

ஹ்வானுல் முஸ்லிமூன்) ஸ்தாபகரின் சகோதரருமான எகிப்திய நாட்டைச் சார்ந்த கம்மல் பன்னா ''தலையை மறைத்தல் ஒரு கடமை அல்ல. இது குர்ஆன் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதன் விளைவாகும். ஹிஜாப் அணிவதோ அல்லது சிறு பாவாடை அணிவதோ தன் சுயவிருப்பத்திற்கேற்ப எடுக்கும் சுயமான முடிவே"" எனக் கூறுகிறார். மேலும் தனது விருப்பிற்கேற்ப உடை அணியும் சுதந்திரத்திற்கு தடையாக

ருப்பதாலேயே அத்தகைய ஹிஜாப்-எதிர்ப்புச் சட்டங்களை நான் ஆதரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.


.அண்மைக் காலங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் பாதிப்பிற்கு உள்ளானோரால் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய வழிதவறிய கருத்துக்கள் கடந்த கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்திருக்கவில்லை. இஸ்லாமிய கட்டளைகளும், விலக்கல்களும், குர்ஆனிலும் சுன்னாவிலும் பதியப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே நாம் பெற முடியும். இவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு)வின் கட்டளை யாதென அறியலாம். மகரம் அல்லாத வேறு ஆடவர் முன்னிலையில் 'ஹிஜாப்" அல்லது 'ஹிமார்" உதவியுடன் தலைமுடியை மறைப்பது கட்டாயம் என்பது இஸ்லாத்தில் விளக்கப்பட்டுள்ளது.அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.



அவர்கள் தங்கள் முந்தானையால்(குமுர்) தங்கள் கழுத்தையும் மார்பையும் மறைத்துக்கொள்ளட்டும்.(24-31)



குமுர் என்பது முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தைய குறைஷியப் பெண்களால் அணியப்பட்டது. இது தலையை மறைத்து, கழுத்தையும் மார்புப் பகுதியையும் வெளிக்காட்டியவாறு உடலின் பின்புறமாக கீழ்நோக்கி விழுந்து காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் அருளப்பட்ட இவ்வசனம் வெளிக்காட்டப்படும் கழுத்தையும் மார்பையும் 

தலையுடன் சேர்த்து மறைக்குமாறு கட்டளையிடுகிறது.



ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.



அஸ்மா-பின்-அபுபக்கர் அவர்கள் மெல்லிய ஆடை அணிந்தவராக நபிகளார்(ஸல்) அவர்கள் முன் வந்தபோது, நபிகளார்(ஸல்) முகத்தை அப்பாற் திருப்பியவாறு ' அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் இதையும் இதையும் தவிர ஏனையவற்றை காண்பித்தல் ஆகுமானதல்ல" எனக்கூறி முகத்தையும் மணிக்கட்டையும் காண்பித்தார்கள்.



அதிர்ஷ்ட வசமாக பல முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஒரு கடமை என அறிந்திருந்தாலும்கூட அடிக்கடி குழப்பத்திற்கும் தவறான கருத்திற்கும் உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய உடைநெறி யாதென விளங்காத நிலையில் காணப்படுகின்றனர். ‘துப்பட்டாஎன அழைக்கப்படும் மிக மெல்லிய துணி மூலம் தலைமுடியையும் கழுத்தையும் மறைப்பதே போதும் என எண்ணுகின்றனர். அத்துணியின் ஊடாக அப்பகுதிகள் தெupந்தாலும் தவறல்ல எனக் கருதுகின்றனர். வேறு சிலர் தலைமுடியின் ஒருபகுதி தெரியுமாறு தலைமுக்காடை தளர்த்தி அணிவது போதுமென எண்ணுகின்றனர். சிலரோ தலைமுடி, காது, கழுத்துப்பகுதி தெரியுமாறு 'பந்தனா" அணிகிறார்கள். ஒருசாரரோ தலைப்பகுதியை சரியாக மறைத்துப் பின்னர் உடலின் வடிவம் தெரியுமாறு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அல்லது கணுக்காலுக்கு மேலான பாவாடையை கை கால் தெரியுமாறு அணிகின்றனர்.



பொது இடமானாலும் சரி தனிமையானாலும் சரி உடை சம்மந்தமான இஸ்லாமிய கட்டளைகள் சுயவிருப்பு, சுயகருத்து அல்லது கண்ணியம்பேணல் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. மாறாக அது அல்லாஹ்(சுபு)வின் கட்டளையாகும். அல்லாஹ்(சுபு) தொழுகையை கடைமையாக்கிய பின்னர் தொழும் முறையை அவரவர் விருப்பிற்கேற்ப விட்டுவைக்கவில்லை. தொழும் முறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதைப்போன்றே உடலை மறைக்கும் உடை விசயத்திலும் அதைப்பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொழுகையைப் போன்றே உடை விவகாரத்திலும் இறைவனின் கட்டளைப்படி நடப்பது அவசியமாகும். சுயசிந்தனையோ அல்லது சுயவிருப்போ எவ்வாறு தொழுகையில் ஆதிக்கம் செலுத்தவில்லையோ அதைப்போல உடை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவது கூடாது.



அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.“ உம் இறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை தீர்ப்பளிப்பவராக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்புச்செய்தது பற்றி எவ்வித அதிருப்தியையும் தங்கள் மனதில் கொள்ளாது முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகள் ஆகமாட்டார்கள்.”(4:65)அல்குர்ஆன் வசனங்கள் மூலமும் நபி(ஸல்) அவர்களின் வாக்குகளாலும் தெளிவாக கூறப்பட்டிருப்பதற்கேற்ப ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை மகரமற்ற ஆண்கள் முன்னிலையில் மறைத்தல் கடமையாகும். ஆடையானது தோல் தெரியும் அளவிற்கு மெல்லியதாகவோ உடற்கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையிலோ இருத்தலாகாது. மணிக்கட்டு வரையிலான கை, முகம்; தவிர்த்து, கழுத்து, முடி உட்பட பெண்ணின் முழு உடம்பும் 'அவ்ரா" ஆகும் (மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும்).



சூரா அந்நு}ரில் அல்லாஹ்(சுபு) விவரிக்கின்றான்முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (24:31)



இப்ன் அப்பாஸ் அவர்கள் 'வெளியில் தெரியக்கூடியவை" என்பதற்கு மணிக்கட்டு வரையிலான கைப் பகுதி மற்றும் முகம் என விளக்கமளித்துள்ளார்கள்.



மேலும் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கிமாரையும் (தலை, கழுத்து, மார்புப் பகுதிகளை மறைக்கும் துணி) ஜில்பாபையும் (கழுத்திற்கு கீழ் உடலின் மற்ற அனைத்து பகுதிகளையும் மறைத்து மேலிருந்து நிலத்தை நோக்கி தொங்கும் ஒரு தனி ஆடை) அணியுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அதாவது கிமாருடன் சட்டையும் பாவாடையுமோ அல்லது முழுக்கால் சட்டையுமோ அணிவது ஆகுமானதல்ல.



அல்லமா இப்ன்-அல்-ஹசாம் எழுதுகிறார்கள் ''நபி அவர்கள் காலத்திலிருந்த அரபிமொழியில் ஜில்பாப் என்பது முழு உடம்பையும் மறைக்குமாறு அமைந்திருக்கும் தனி உடையாகும். முழு உடம்பையும் மறைக்க முடியாத உடையை ஜில்பாப் எனக் கூறமுடியாது."" (அல்-முஹல்லா தொகுதி 3)பெண்கள் இவ்விரு உடையையும் அல்லாமல் வேறு உடையணிந்து வெளியில் நடமாடுவார்களாயின் அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு மாறிழைத்து பாவத்திற்கு ஆளாவார்கள்.



ஜில்பாபுக்கான ஆதாரங்களை அல்லாஹ்(சுபு) சூரா "அல்-அஹ்சாப்" யில் கூறுகிறான்.“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் வெளி ஆடைகளால்(ஜிலாபீப்) முழு உடலையும் பாதுகாக்குமாறு கூறுவீராக.”(33:59)மேலும் உம்மு அதியா(ரலி) கூறுகிறார்கள்அல்லாஹ்வின் து}தர் ஈத் பெருநாள் தினத்தன்று, இளம் பெண்கள், மாதவிடாய் பெண்கள், மற்றும் மறைப்பு அணிந்த பெண்கள் ஆகியோரை அழைத்து வர ஆணையிட்டார்கள். மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்திற்கு அப்பாலிருந்து பிரசங்கத்தை கேட்குமாறு அமரவைக்கப்பட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே ஜில்பாப் இல்லாத பெண்களின் நிலை என்ன" என வினவியதற்கு அவர்கள் கூறுகிறார்கள் 'ஏனைய சகோதரியிடம் ஒரு ஜில்பாபை இரவல் வாங்கி அணியட்டும்." என பதிலளித்தார்கள்.



ஆகவே நபி அவர்கள் ஜில்பாப் இல்லாவிட்டால் இரவல் வாங்கியேனும் அணியுமாறு கூறியுள்ளார்கள் என்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதல்லவா.



ஒரு முஸ்லிம் பெண் மேற்கத்திய பெண்களை ஒப்பாக்கி தாம் எதை அணியவேண்டும் என சுயமாக முடிவெடுத்தல் கூடாது. பனி-தமீம் இனத்தைச் சார்ந்த சில பெண்கள் மெல்லிய துணிகளை அணிந்து ஆயிஷா அவர்களை சந்தித்தபோது 'இது முஃமீனான பெண்ணிற்கு தகுந்த உடையல்ல. நீங்கள் முஃமீன்கள் இல்லாவிடில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்." என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.



இன்றைய முஸ்லிம் பெண்கள் நபி (ஸல்) அவர்களின் மதிப்பிற்கும் அல்லாஹ்(சுபு)வின் பொருத்தத்திற்கும் ஆளான அன்றைய முஸ்லிம் பெண்களின் முன்மாதிரியை பின்பற்றி நடத்தல் அவசியம். அன்றைய நாளில் உடை சம்பந்தமான குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட போது அப்பெண்கள் ஒரு நிமிடமேனும் தாமதிக்காது கிடைத்தவற்றைக் கொண்டு அவ்ராவை மறைத்துக் கொண்டார்கள்.



சய்பாவின் மகளான சஃபீயா கூறியதாவது,“ஆயிஷா(ரலி) அவர்கள் அன்சார் பெண்களை புகழ்ந்து நல்வார்த்தை கூறினார்கள். பின்னர் 'சூரா அந்நு}ர் வசனங்கள் இறங்கிய பொழுது அவர்கள் வீட்டிலுள்ள திரைகளை கிழித்து அதனை தலைமறைப்பாக்கிக் கொண்டார்கள்" எனக் கூறினார்கள். (சுனன் அபுதாவூத்)



ஆகவே ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!



மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக - அறிவியல் - அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.
ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் - அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் - திரைப்படங்களும் - ஆடல் பாடல் - கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.
ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் - நடிகர்கள் - நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி ஓட்டம் - காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் - வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் - இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை - கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) - வேகமாக கற்றுத் தரமுடியும். காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை - குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் - நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் - மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் - நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் - அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் - வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் - கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் - மது அருந்தாமல் - விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று யாராவது காட்டினால் தெரிந்து கொள்ளலாம். ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் - நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?
திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா - நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சும் மனநிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் - ஒரே ஒரு சணடை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான். எல்லா மொழிக்காரர்களும் ஒருவேளை அரசாணை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்தந்த மொழி வெறி அவரவர்களுக்கு.
அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க - ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் - சின்னத்திரை எனப்படும் T.V. சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V. க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் - தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் - குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் - செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப - தேசிய சர்டிபிகேட்,
சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் - பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி - எண்ணை - மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? - சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V. மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V. மாயம்.
இந்த மூன்றைத் தவிர அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை - மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். பள்ளி- கல்லூரி காலங்களில் கைக்கடியாரம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியாமலிருந்த மக்களுக்கு விஞ்ஞானம் - கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்ஃபோன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்ஃபூன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு.
பெரிதான் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் கெட்டுவிடும் என்று சொன்னார்கள் - அதையும் தாண்டி புனிதமாக சிறிதே - சிறிதான் இந்த செல்போன்களில் இன்டர்நெட் இணைப்புடன் - F.M. T.V. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அதையே உற்றுநோக்கி - இயக்குவதாலும் - படம் பார்ப்பதாலும் கண் என்ன ஆகும் என்று மெய்ஞானம் தான் பதில் சொல்லவேண்டும்.
ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு முதல் தயாரிப்பை ஒருவன் கண்டுப்பிடித்தவுடனேயே அதைப் போன்ற - அதனைவிட பன்மடங்கு வசதிகளுடன் அடுத்தடுத்தவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருவர் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவே செல்போன்கள் தயாரிக்கப்ட்டன. ஆனால் இன்று அதன் நிலையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.
அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் - பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் - பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் - பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் - காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் - திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலகை நீக்கமற இயக்கிக்கொண்டிருக்கும் இறைவன் அருளிய மார்க்கத்தில் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி நாம் ஒவ்வொருவரும் நற்பண்புகளை அடைந்திட முயலவேண்டும். இஸ்லாத்தில் இல்லாத மனித நேயம் - சகோதரத்துவம் - மனிதன் மனிதனாக வாழக்கூடிய வழிமுறை வேறெங்கும் இல்லை என்பதை நாம் சொல்லி அல்ல. ஒவ்வொருவரும் படித்து, கேட்டு, உணரவே வலியுறுத்துகிறோம். ஏனெனில் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சி முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடாதீர்கள் என்று (3:102) அல்குர்ஆன் கூறுகிறது. அல்குர்ஆனை ஏன் இங்கு விளக்க விளைகிறோம் என்றால் அல்குர்ஆன் கூறுகிறது.இதோ (நபியே) இந்நெறி நூலிலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக: நிச்சயமாக தொழுகை மனிதரை மானக் கேடானவற்றையும் - தீமையை விட்டும் விலக்கும். நிச்சயமாக இறைவனின் தியானம் (திக்ரு) மிகவும் பெரிதான சக்தியாகும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன் (29:45). நபியவர்கள் சொல்வதை பாருங்கள். எவர் தன் இரு தொடைகளுக்கிடையில் இருப்பதையும் காத்துக் கொண்டாரோ அவர் சுவர்க்கம் புகுவார். (ஆதாரம் - புகாரி) மேலும் எவர் அந்நியப் பெண்களிடம் தன் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். எனவே பார்வை ஒன்றே போதுமே என்ற போக்கில் அனைத்துப் பாவங்களுக்கும் பார்வையை முதலீட்டாக்கி நாம் செய்யும் ஒவ்வொரு அடுத்தடுத்த தவறுகளையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஓரினச் சேர்க்கையிலும் - விபச்சாரத்திலும், மதுவிலும் - சூதிலும் இருக்கும் இன்பத்தை விட நரகத்தில் கொடுமை அதிகம் என்பதை பயந்து நற்பேறுகளை அடைய இஸ்லாமே அருமருந்து என்பதை உளப்பூர்வமாக உணர்வுப்பூர்வமாக ஏற்று - இறைவனுக்கு பயந்து இவ்வுலகில் தடுக்கப்பட்ட சிற்றின்பங்களை துறந்து - மறு உலகில் கிடைக்கும் பேரின்பங்களை அடைந்திட எல்லோரும் முன்வர வேண்டும். நல்லதை பார்த்து, நல்லதைக் கேட்டு - நல்லதைப் பேசி, நல்லதையேச் செய்யும் நன்மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள் புரிவானாக. ஏதோ பெயரளவில் முஸ்லிமாக இருந்தோம் - வாழ்ந்தும் - மடிந்தோம் என்றில்லாமல் அல்லாஹ் சொல்வது போல் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து முஸ்லிமாகவே மரணிக்கும் நற்பேற்றை நாம் அடைவோம்.
பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலாவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதை விட நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்ள ஒவ்வொரு நொடித் துளியையும் பயன்படுத்திக்கொண்டு பண்படுவோம். அதன் மூலம் இன்புறுவோம். உலகில் எல்லாவற்றையும் துறந்து விடச்சொல்லி இறைவன் சொல்லவில்லை. குடும்பம் - வீடு - வாசல் - தர்மம் - ஆட்சி அதிகாரம் அனைத்திலும் என்னதான் விஞ்ஞானங்கள் வந்தாலும் மெய்ஞானத்தால் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை அறிந்துணர்ந்து நடப்போமானல் எந்த விபரீதங்களையும் இறைவன் அருளால் எதிர்கொள்ள முடியும். இறைவன்


MELPATTAMBAKKAM is small settlement in Cuddalore District, Tamil Nadu. It spreads over an area of around six square kilometers and houses of Muslim Nearby places of interests are Panruti, Kurinjipadi, Cuddalore and Neyveli. Melpattampakkam can be accessed from Panruti and Cuddalore by road. Tiruchirapalli Airport is the nearest airport. Cuddalore Junction Railway Station serves Melpattampakkam ABOUT MELPATTAMBAKKAM
Melpattampakkam is a ` panchayat town` situated in Cuddalore district of the south Indian state of Tamil Nadu. Covering an area of six square kilometers, Melpattampakkam is surrounded by several interesting places like, Panruti, Kurinjipadi, Cuddalore and Neyveli. It is easily accessible from Panruti and Cuddalore by road. The nearest ` access points` are Tiruchirapalli Airport and Cuddalore Junction Railway Station. A Vinayakar Temple is located here. The Indian Census report of 2001 throws light on the demography of Melpattampakkam. The population of Melpattampakkam had been enumerated to be 6,593. Males account for 46 percent of the population and females comprises of the remaining 54 percent. In Melpattampakkam, 10 percent of the population is less than six years of age. The average literacy rate of this ` panchayat town` has been estimated to be 71 percent. This is much higher than the national average literacy rate, which is 59.5%. To be specific, the male literacy rate is 75 percent and the female literacy rate is 67 percent.

Demographics
As of 2001[update] India census[1], Melpattambakkam had a population of 44,191. Males constitute 50% of the population and females 50%. melpattambakkam has an average literacy rate of 69%,which is higher than the national average of 59.5%: male literacy is 76%, and female literacy is 61%. In meplattambakkam, 11% of the population is under 6 years of age.
The local economy is predominantly agriculture based. It is also a historical city in which the East India Company established the East India Distilerries (E.I.D), the first distillery factory in India by the British. The company now called E.I.D Parry (owned by the Murugappa group) produces and exports Sugar, Parry's chocolates and spirits.
PoliticsNellikuppam assembly constituency is part of Cuddalore (Lok Sabha constituency).

நீங்கள் இஸ்லாம் பற்றி தெரிந்து கொள்ள ஒரு அற்புதமான இணையதளம் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
go this website. www.onlinepj.காம்

yours
A. MOHAMED RAFUDEEN
E-MAIL : rafic.sara@yahoo.com. sara.rafic@hotmail.com, sara.rafic@gmail.com
Mobile : 00971505068334
துபாய்,
ஐக்கிய அரபு அமிரகம்











தஞ்சையில் 2004 மார்ச் 21 அன்று முஸ்லிம்களின் மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணி திலகர் திடலை அடைந்து மாநாடு நடந்தது. மாநாடு நடந்த திலகர் திடலின் மொத்த பரப்பளவு 97,450 சதுர அடியாகும்.2006 ஜனவரி 29 அன்று கும்பகோணத்தில் முஸ்லிம்களின் உரிமை மீட்புப் பேரணியும், மாநாடும் நடைபெற்றது. இப்பேரணி, கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் முடிந்தது. நான்கு வீதிகள் சந்திக்கும் காந்தியடிகள் சாலையில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டது. மாநாட்டின் இடதுபுறம் (கடலங்குடி தெரு) மட்டும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டாலும், பெண்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததால், ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட மேடையின் வலதுபுற சாலையும், மேடையின் முன்புறம் அமைந்த வீதியும் பெண்களுக்கே ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. இதுதவிர உச்சிப் பிள்ளையார் கோவில் வீதியைத் தாண்டி தஞ்சை மெயின் ரோடுக்கு அப்பால் சாரங்கபாணி மேலவீதியிலும், தேரடி வரை பெண்கள் நிரம்பி வழிந்தனர்.

மேலும், நாகேஸ்வரன் தெற்கு வீதி, நாகேஸ்வரன் மேற்கு வீதி மற்றம் பெரிய பள்ளிவாசல் தெருவிலும் பெண்களே ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்த சிறிய வீதிகளைக் கணக்கில் கொள்ளாமல் பெண்கள் நிரம்பி வழிந்த மேடையின் வலது, இடது மற்றும் எதிர்புறம் ஆகிய மூன்று பகுதிகளின் பரப்பளவு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 725 சதுர அடியாகும்.

அதாவது தஞ்சை மாநாட்டின் போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட திலகர் திடலின் பரப்பளவை விட, கும்பகோணத்தில் பெண்கள் மட்டும் அமர்ந்திருந்த மூன்று பகுதிகளின் பரப்பளவு மட்டும் நாற்பதாயிரம் சதுரடி அதிகமாகும். மேலும், உச்சிப் பிள்ளையார் கோவில் வீதியைத் தாண்டி தஞ்சை மெயின் ரோடுக்கு அப்பால் சாரங்கபாணி மேலவீதி தேரடி வரை நாகேஸ்வரன் தெற்கு வீதி, நாகேஸ்வரன் மேற்கு வீதி ஆகியவற்றையும் சேர்த்தால் திலகர் திடலைவிட இரு மடங்கு பரப்பளவில் பெண்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஆண்களுக்குரிய இடத்தையும் கணக்கில் கொண்டால் திலகர் திடலை விட சுமார் ஆறு மடங்கு இடங்களில் மக்கள் குழுமியிருந்தனர். சுருங்கச் சொன்னால் தஞ்சையில் திரண்ட மக்கள் திரளை விட ஐந்து முதல் ஆறு மடங்கு மக்கள் குடந்தையில் திரண்டனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.. தஞ்சையில் திரண்ட அந்த மக்களில் பெரும்பாலோரும் தவ்ஹீத் ஜமாஅத்தும் இணைந்திருந்ததால் வந்தவர்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அறிவுடையோர் இதிலிருந்தே வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம்.

கண்ணுக்கு எட்டா தூரத்திலும் நிற்கும் பேரணிக்கு வந்த வாகனங்கள்...

அசூர் பைபாஸிலிருந்து சென்னை மார்க்கத்தில் நின்ற வாகனங்கள்

அசூர் பைபாஸிலிருந்து தஞ்சை மார்க்கத்தில் நின்ற வாகனங்கள்

கும்பகோணம் மார்க்கத்தில் நின்ற வாகனங்கள்

அணி அணியாய் மக்கள்...

1. பேரணி துவக்கத்தில் மூன்று பேர் கொண்ட வரிசையாக சென்ற போது...

2. நேரம் செல்லச் செல்ல ஐந்து ஆறு பேர் கொண்ட வரிசையாக ஆன போது...

3. பின்னர், சாலையையே அடைத்துக் கொண்டு சென்ற போது...

எல்லாப் புகழும் வல்ல நாயனுக்கே!

;;